40 கட்சிகளுக்கு அதிகமானோர் ரணிலுக்கு ஆதரவு : பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டு

Kandy Ranil Wickremesinghe Jeevan Thondaman Sri Lanka Presidential Election 2024
By Sathangani Sep 01, 2024 09:55 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 40 கட்சிகளுக்கும் அதிகமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவை வழங்கியுள்ளனர் என  இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி (Bharath Arulsamy) தெரிவித்துள்ளார்.

கண்டி (Kandy) அக்குறனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இனவாதத்தை தோற்றுவித்து அதன்மூலமாக பல சமூகங்களைப் பிரித்து ஆட்சி செய்த பலர் இன்றைக்கு எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாத அளவிற்கு விலாசம் இல்லாமல் காணாமல் போய் விட்டார்கள்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் குழு கூட்டம் !

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் குழு கூட்டம் !

சிந்தித்து வாக்களியுங்கள் 

நாம் அன்று எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், வாக்களித்ததனால் தான் கடந்த காலங்களில் கஷ்டத்தை அனுபவித்தோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியைக் கைப்பற்றிய பின் ஒரு சுமூகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

40 கட்சிகளுக்கு அதிகமானோர் ரணிலுக்கு ஆதரவு : பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டு | More Than 40 Parties Support To Ranil In Election

அதுமட்டுமில்லாமல், அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்ற பின், எடுத்துக் கொண்ட ஆய்வு அறிக்கையின் படி, எங்களுடைய மக்களுடைய ஜனாசாக்களை, எரித்ததோ அல்லது தவறான முறையில் பயன்படுத்த தோன்றிய கொள்கை தீர்மானத்தை, ஆய்வு அடிப்படையில் நிரூபித்து இன்றைக்கு அரசாங்கத்தை முஸ்லிம் மக்களிடையே மன்னிப்பு கேட்க வைத்திருக்கின்றோம்.

இந்த விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருமை கொள்கின்றது. காரணம் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை இல்லாமல் செய்து, எங்களை வேறுபாடு காட்டி பார்த்ததனால் தான், ஒருசாரரார் முன்னோக்கி செல்ல மற்றொரு சாரரார் பின்னோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு

கண்டி மாவட்டத்தில் மட்டும் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில இருக்கின்றோம். ஒரு இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களும், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்களும் இருக்கின்றோம்.

40 கட்சிகளுக்கு அதிகமானோர் ரணிலுக்கு ஆதரவு : பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டு | More Than 40 Parties Support To Ranil In Election

ஆனால் எங்களுடைய அடையாளத்தைப் பாதுகாக்க கூடிய, சில தலைமைகளை நாங்கள் தேர்ந்தெடுக்காததனால் சில முக்கியமான எங்களுடைய அடிப்படைத் தன்மைகளையும் உருவாக்கங்களையும் விட்டுக்கொடுத்துவிட்டுத் செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று 40 கட்சிகளுக்கும் அதிகமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கியுள்ளனர். ஜனாதிபதியாக ரணிலை தேர்ந்தெடுத்த பின்னர் நாடாளுமன்றத் தேர்தலோ, பிரதேச சபைத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ நடைபெற்றால், நீங்கள் ஊழல்வாதிகளையும், சுயநல அரசியல்வாதிகளையும் நிராகரியுங்கள். அது உங்களுடைய கைகளிலேயே இருக்கின்றது.

ஆனால் இன்று அவர்களை காரணம் காட்டி, அதில் உள்ளவர்களை காரணம் காட்டி நாட்டினுடைய தலைவிதியை தவறுதலானவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்“ என தெரிவித்தார்.

சஜித்தை சிறுபிள்ளைத்தனமாக விமர்சனம் செய்யும் அனுர : இம்ரான் எம்.பி பகிரங்கம்

சஜித்தை சிறுபிள்ளைத்தனமாக விமர்சனம் செய்யும் அனுர : இம்ரான் எம்.பி பகிரங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி