மொரோக்கோவில் அதிபயங்கர நிலநடுக்கம்! பலியானோர் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு (புதிய இணைப்பு )
புதிய இணைப்பு
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் , 1,200 பேர் காயமடைந்துள்ளனர் என்று மொராக்கோ அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் இணைப்பு
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளதாகவும், குறைந்தது 672 பேர் காயமடைந்துள்ளதாகவும் மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
மொராக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 632 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 329 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் குறித்த பகுதி மலைப் பாங்கான இடம் என்பதால் பணிகள் கடினமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மொராக்கோவில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களும் அழிவடைந்துள்ளன.
We extend our deepest sympathies to the people of Morocco in the wake of the devastating 6.8 earthquake, which tragically claimed the lives of many. Our hearts are with the affected families during this challenging period. #MoroccoEarthquake pic.twitter.com/J2bcCIA5e4
— THEPRIME.BITZ (@BitzTheprime) September 9, 2023
முதலாம் இணைப்பு
ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் மத்திய பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (22:11 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்கள் சேதம்
? The first terrifying moments of the earthquake in #Morocco.#deprem #المغرب #مراكش #الداربيضاء #فاس #fes #Morocco #earthquake #morocoearthquake #strongearthquake #marrakesh #marrakech #Marrakesh #زلزال #earthquake #sismos #sismo pic.twitter.com/EpI9KYHKVP
— Chaudhary Parvez (@ChaudharyParvez) September 9, 2023
இந்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வெடிப்புக்குள்ளான தெருக்களின் காணொளிகளை வைரலாக பரவி வருகின்றன.
அத்துடன் பொதுமக்கள் பதற்றத்துடன் வீதிகளில் ஓடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகின்றன.
#ALERTA ??#المغرب #مراكش #الداربيضاء #فاس #Morocco #fes #casablanca #Marrakesh #زلزال #earthquake ?? | SISMO EN MARRUECOS: ?? Major magnitude 6.9 earthquake - 75 km southwest of Marrakech, Marrakesh-Safi, Morocco,#fas #deprem#Morocco #earthquake #morocoearthquake… pic.twitter.com/vSmbtvqGWj
— Ape? (@Apex644864791) September 9, 2023