கனடாவை மிரட்டும் கொரோனா! 24 மணித்தியாளத்தில் பதிவான உயிரிழப்பு
Canada
Corona
People
By Chanakyan
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 564பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர் என கனேடிய ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளன.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14 லட்சத்து 19ஆயிரத்து 196பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26ஆயிரத்து 405பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 526பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 345பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13 லட்சத்து 87ஆயிரத்து 265பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி