மொசாட் அமைப்பின் இரண்டு உயர் அதிகாரிகள் பணி நீக்கம்!
ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் வகுக்கப்பட்டத் திட்டம் தோல்வியடைந்ததால், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் இரண்டு உயர் அதிகாரிகளை அதன் தலைவர் ரோமன் கோஃப்மேன் பணிநீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் மொசாட்டின் உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவராகவும், மற்றொருவர் அந்த அமைப்பின் ஈரான் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்ததாக தெரியவருகிறது.
எழுத்துப்பூர்வத் திட்டம்
ஈரானில் உள்ள சிறுபான்மைக் குழுக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டி, நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களை உருவாக்கி தற்போதைய ஈரானிய ஆட்சியை அகற்றுவதற்கான எழுத்துப்பூர்வத் திட்டத்தை இவ்விரு அதிகாரிகளும் உருவாக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படாமல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மொசாட்டின் கட்டமைப்பு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இவர்களது பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |