உங்களை அறியாமலேயே உங்கள் போனுக்குள் மொசாட்..!
இஸ்ரேலில் அப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய இரண்டு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சி மையங்களில் ஐபோன்களுக்கு முக்கிய பாகங்களை பொருத்தும் பணி இஸ்ரேலில் மட்டும்தான் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க வர்த்தக அமைச்சர்அவார்ட் லுட்னிக் ஒரு அவசர அறிவித்தலை விடுத்திருந்தார்.அப்பிள் நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்ற மெமரி சிப்ஸை ஐபோன்களில் பாவிக்கக் கூடாதென்று அவர் ஆலாசனை வழங்கியிருந்தார்.
அந்த இரண்டு நிறுவனங்களும் சீன இராணுவத்துடன் தொடர்புபட்டவை என்றும் அந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை அமெரிக்க மக்கள் நாள்தோறும் தமது சட்டைப் பைகளில் கொண்டு திரிவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தென்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கைபேசிகளில் பொருத்தப்படும் கமராக்கள் மூலம் அவற்றை பாவிப்பவருக்கு தெரியாமலேயே அதனை பொருத்திய நிறுவனத்திற்கோ அல்லது நாட்டிற்கோ தகவல்கள் சென்றடைவது கண்டு பிடிக்கப்பட்டமை தற்போது உலகை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |