வடக்கு, கிழக்கிலேயே புலம்பெயர்வதற்கு அதிகம் விரும்புகிறார்கள்: பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டு (காணொளி)
புலம்பெயர்வதற்கு விரும்புபவர்கள் அதிகமாக வடக்கு கிழக்கு மாகணங்களிலேயே காணப்படுகின்றதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், புலம்பெயர்வதற்கு விரும்புபவர்கள் அதிகமாக வடக்கு கிழக்கு மாகணங்களில் இருந்தாலும் புலம்பெயர்வதற்கு நடவடிக்கை எடுத்தவர்களாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே இருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, வடக்கு கிழக்கில் மக்கள் புலம்பெயர்ந்தமைக்கான காரணம் யுத்தமாகும் ஆனால் இப்பொழுது தெற்கிலிருந்து மக்கள் புலம்பெயர்வதற்கு முக்கியமான காரணம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவு அடைந்துள்ளமையால் ஒட்டுமொத்த இலங்கையர்களும் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடந்தும் அவர் கூறியவை கீழுள்ள காணொளியில்,.