அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lanka Government
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் வரிசையில் அதிகளவானோர் அரச சேவையாளர்களாகவே காணப்படுவதாகவும், பல அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமுகமளித்து எரிபொருள் வரிசையில் நிற்பதாகவும் பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்து எரிபொருளுக்காக காத்திருக்கும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துள்ளது.
இதனால் பல அரச நிறுவனங்கள் உரிய முறையில் கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, சம்பளம் குறைக்கப்படாமல் இருப்பதால், அரசு ஊழியர்கள் முன்பை விட, அலுவலக பணிகளில் அலட்சியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி