அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக மாறிய மட்டக்குளி
கொரோனா தொற்றால் கொழும்பு மாவட்டத்தில் அதிக அச்சுறுத்தல் மிக்க பகுதியாக மட்டக்குளி பகுதி நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மட்டக்குளி பகுதியில் 51 கொவிட் தொற்றாளர்கள் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 241 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மட்டக்குளிக்கு அடுத்தபடியாக கிராண்ட்பாஸ் பகுதியில் 27 தொற்றாளர்களும், மருதானை பகுதியில் 22 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புளுமென்டல் பகுதியில் 10 தொற்றாளர்களும், தெமட்டகொட பகுதியில் 9 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 210 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகள் அச்சுறுத்தலான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பகுதியில் நேற்றைய தினம் 40 தொற்றாளர்களும், கம்பஹா பகுதியில் 32 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.