பேரிடருக்கு மத்தியில் இரு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!
இயற்கை சீற்றங்களால் நாட்டில் பதிவாகி வரும் தொடர் உயிரிழப்புகளுக்கு மத்தியில் தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் இன்று (02.12.2025) தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
அநுராபுரம், மல்அத்து ஓயா, மிஹிந்து புர பாலத்தின் மேலிருந்து இன்று (02.12.2025) காலை 6.30 மணியளவில் மல்வத்து ஓயாவில் குதித்து அவர் இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய குறித்த தாயார் 8 வயதுடைய மகன் மற்றும் 4 வயதுடைய தனது இரு பிள்ளைகளுடன் மல்அத்து ஓயாவுக்கு குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன பிள்ளைகள்
குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகள் இருவரையும் காணவில்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காணாமல் போன இரு பிள்ளைகளை தேடி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மிஹிந்து புர கிராமத்திற்கு அருகே உள்ள மல்அத்து ஓயாவின் மரமொன்றிற்கு அருகில் தரித்திருந்த குறித்த பெண்ணை பிரதேசவாசிகள் கயிறு ஒன்றின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
குறித்த பெண் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த இடத்தில் வைத்து அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் கையடக்கத் தொலைபேசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய தந்தைக்கு இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |