நடுவானில் பிறந்த ஆண் குழந்தை: விமானத்தில் இடம்பெற்ற பிரசவம்
ஓமன் (Oman) நாட்டிலிருந்து புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாயொருவர் ஆண்குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று மும்பை நோக்கி வந்துள்ளது.
விமானம் அதிகாலை 3.15 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது தாய்லாந்து நாட்டை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
விமான பணியாளர்கள்
இதையடுத்து, உடனடியாக விமான பணியாளர்கள் கேபினில் கர்ப்பிணிக்கு அறை ஒன்றை தயார் செய்துள்ளனர்.
அத்தோடு, விமானி மூலம் மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விமானத்தில் பயணம் செய்த தாதி ஒருவர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முன்வந்துள்ளார்.
பணிப்பெண்கள்
இதையடுத்து, அவர் பணிப்பெண்கள் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த நிலையில், அப்பெண்ணுக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன் தாய் மற்றும் சேய் இருவரும் அங்கு தயாராக இருந்த நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தாய் மற்றும் சேய்க்கு தேவையான உதவிகளை செய்ய தாய்லாந்து தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
