தாய் மயங்கிய நிலையில் வீட்டிற்குள் : மகன் குடும்பத்துடன் தப்பியோட்டம்
விஜய ரஜதஹன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் களஞ்சிய அறையில் மயங்கிய நிலையில் கிடந்த சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க வயோதிப பெண் இன்று (5) அதிகாலை கதவுகளை உடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மகன் மற்றும் அவரது குடும்பத்தினருடன்
குறித்த பெண் தனது மகன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், சுமார் ஐந்து நாட்களாக மகனும் குடும்பத்தினரும் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டில் வசித்த மகன் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவர் தொழில்நுடபவியலாளர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டிலுக்கு அடியில் மயங்கிய நிலையில்
வீடு மூடப்பட்டு கிடந்ததுடன் தாய் இருந்த அறையின் கதவும் மூடப்பட்டு வெளியில் கட்டப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
களஞ்சிய அறையின் கதவைத் திறந்து சோதனையிட்டபோது, இந்த மூதாட்டி கட்டிலுக்கு அடியில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |