குழந்தைக்கு பாலூட்டிய தாய் வன்புணர்வு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
மூன்று இளைஞர்கள் சேர்ந்து குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த தாயை வன்புணர்வு செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பூகொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை தாக்கப்போவதாக அச்சுறுத்தி
குழந்தைக்கு தாய் பாலூட்டிக்கொண்டிருந்த நிலையில் தாயிடமிருந்து குழந்தையை அபகரித்த இளைஞர்கள் குழந்தையை தாக்கப்போவதாக அச்சுறுத்தி தாயை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக பூகொடை காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் இருவர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தாய் வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 18 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்