கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரேரணை குறித்து வெளியான தகவல்
இலங்கைக்கு சொந்தமான கச்சத் தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாயின் கச்சத்தீவு இந்தியாவினால் கையகப்படுத்தப்பட வேண்டும் என இது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சர் தலைமையிலான கட்சி இந்த தீர்மானத்தை செயற்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இந்திய அரசியல் கட்சியொன்று இந்தப் பிரேரணையை நிறைவேற்றியுள்ள போதிலும் இந்திய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் இலங்கைக்கு எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்திய அரசு அப்படியொரு பிரேரணையை முன்வைத்தால் அது குறித்து விவாதிக்கத் தயாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |