திடீரென பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்-தாயும் மகனும் அருந்தப்பு
Mullaitivu
Fire
By Sumithiran
மன்னாரில் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பரானதைப்போன்று முல்லைத்தீவிலும் அதுபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் வீதியில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை திடீரென பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து சாம்பரானது.
ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம் கள்ளுத்தவறணைக்கு அருகில் உள்ள கொங்கிறீட் வீதியில் இன்று புதன்கிழமை (14) 23 மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீரென கேட்ட வெடிப்பு சத்தம்
பெண்களுக்கான மோட்டார் சைக்கிளில் தாயார் தனது மகனை ஏற்றி வரும்போது மோட்டார்சைக்கிளில் திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக்கொண்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக எரிந்து சாம்பராகியுள்ளது. இதில் பயணித்த தாயும் மகனும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்