மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம்: இருவர் கைது..! 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
அவிசாவளை காவல் நிலையத்திற்குப் பெறப்பட்ட பல மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் நேற்று (17.11.2026) அவிசாவளை காவல் நிலையப் புலனாய்வு அதிகாரிகளால் எஹலியகொட காவல் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 16 கிராம் 990 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் 14,850 ரூபா பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
06 மோட்டார் சைக்கிள்கள்
கைது செய்யப்பட்டவர்கள் எஹலியகொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என காவல்துறையினர் விசாரணைகளில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்களால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் 06 மோட்டார் சைக்கிள்களை விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மேலும்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |