பெக்ஹோ சமனின் தாயார் கொலையில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு
பாதாள உலக தலைவன் 'பெக்ஹோ சமன்' என்பவரின் தாயார் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஊருபொக்க - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹால பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில், அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெக்ஹோ சமன் தாயார் கொலை
மித்தெனிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12.08.2026) துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெக்ஹோ சமனின் தாயார் மித்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைத்துப்பாக்கி வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை, இதேவேளையில் காவல்துறை விசாரணைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |