குறைவடையப்போகும் எரிபொருட்களின் விலைகள்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

Parliament of Sri Lanka Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Dec 11, 2023 05:36 AM GMT
Report

வற் வரி திருத்தத்தின் மூலம் தற்போது 15 வீதமாக காணப்படும் வற் வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் 97 பொருட்களுக்கான வற் வரி விலக்களிப்பை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (10) இடம்பெற்ற வற் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி முதல் நவம்பர் வரை 3000இற்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள்

ஜனவரி முதல் நவம்பர் வரை 3000இற்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள்


உலக சந்தையில் எரிபொருள் விலை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்து வருகின்ற நிலை மற்றும் நாட்டில் நிலவும் மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக அரசாங்கத்தினால் அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் போது எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

குறைவடையப்போகும் எரிபொருட்களின் விலைகள்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் | Move To Remove Excise Duty Exemption On 97 Goods

அடுத்த வருடத்திற்கான நிதியை அரசாங்கம் திரட்ட வேண்டியுள்ளது அத்துடன் மேற்கொள்ள இருக்கும் வரி அதிகரிப்பின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை 1.2 வீதமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் அடையாள பணிப்புறக்கணிப்பு

இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் அடையாள பணிப்புறக்கணிப்பு


மேற்படி திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை 1.2 வீதமாக அதிகரித்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதுடன் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட 65 பில்லியன் ரூபாயை அடுத்த வருடத்தில் 209 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அதற்காக உலக வங்கி நிதியுதவியை வழங்கி வந்துள்ள நிலையில் அடுத்த வருடத்திற்காக அந்த நிதியை அரசாங்கம் திரட்ட வேண்டியுள்ளது.

பணவீக்கம் அதிகரிக்க கூடும்

தற்போதுள்ள 9.1 வீத தேசிய உற்பத்திக்கு ஏற்ப அரசாங்கத்தின் வருமானத்தை அடுத்த வருடத்தில் 12.5 வீதமாக அதிகரித்துக் கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. அத்துடன் 2025 ஆம் ஆண்டில் அதனை 15 வீதம் வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு, அதற்கான பொருளாதார மறுசீரமைப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறைவடையப்போகும் எரிபொருட்களின் விலைகள்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் | Move To Remove Excise Duty Exemption On 97 Goods

இதற்கு முன்னர் 20 வீதத்திற்கும் 80 வீதத்திற்கும் இடைப்பட்ட நிலையில் காணப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வரிவீதம் தற்போது 30 வீதத்திற்கும் 70 வீதத்திற்கும் இடைப்பட்டதாக வந்துள்ளதுடன் அதில் மேலும் திருத்தம் செய்வதற்கான யோசனை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் பாடசாலை உபகரணங்கள் அரிசி, மா, சோளம், மரக்கறி மற்றும் பால் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்தும் வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த திருத்தங்களோடு பணவீக்கம் 1.5 வீதத்திலிருந்து 2 வீதம் வரை அதிகரிக்கக் கூடும்" என தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனை சந்தித்த காணொளி: மற்றுமொரு உறவினர் வெளிப்படுத்தும் உண்மை (Video)

தலைவர் பிரபாகரனை சந்தித்த காணொளி: மற்றுமொரு உறவினர் வெளிப்படுத்தும் உண்மை (Video)



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024