நீதிமன்ற துப்பாக்கி சூடு எதிரொலி :அர்ச்சுனா எம்பிக்கு ஏற்பட்ட அச்சம்
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(archchuna ramanathan), பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை பிரதி சபாநாயகரிடம் விடுத்தார்.இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல்
யாழ்ப்பாணத்தில் எனக்கு பலரால் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போதும் எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
