அர்ச்சுனாவின் மறுக்கப்பட்ட வாய்ப்பு : நியாயம் கேட்ட எதிர் கட்சி எம்.பி
கொழும்பு துறைமுகத்தில் பரிசோதனைகளின்றி அனுமதிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான தகவலை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூச்சலிட்ட நிலையில் இன்றை சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், அர்ச்சுனா இராமநாதன் எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்ற சந்தர்ப்பம் கேட்டபோது அது மறுக்கப்பட்டதாகவும், அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குள் உள்ளே நடைபெற்ற விடயம் தொடர்பிலேயே பேச முற்பட்டதாகவும், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சபையில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டது.
பரிசோதனைகளின்றி கொழும்பு துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் மோதல் வெடித்தது.
இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் கூறுவதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து சீற்றமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் கடும்தொனியில் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக பேசுவதற்கான வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
