உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: யாழில் கட்டுப்பணத்தை செலுத்திய அர்ச்சுனா எம்.பி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ்.தேர்தல் திணைக்களத்தில் இன்று (17) அவர் கட்டுபணம் செலுத்தினார்.
கட்டுப் பணத்திற்கான நிதி
இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.
இதற்கமையய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம்.
ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லாததால் போட்டியிடும் வேட்பாளர்களிடமே அதற்கான நிதியை வழங்குமாறு கூட கேட்டிருக்கிறோம்.
தேர்தலில் போட்டி
அவ்வாறு அவர்கள் வழங்குமிடத்தே அந்த நிதியை நாம் மீண்டும் அவர்களிடம் கிடைக்கும்என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தும் இருக்கிறோம்.எமக்கான பணம் வந்த பின்னர் அந்த நிதியை நிச்சயம் அவர்களிடமே வழங்குவோம்.
இதனடிப்படையில் வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள சபைகளுக்கு தொடர்ந்தும் நாம் கட்டுப் பணத்தை செலுத்த உள்ளோம்.
இவ்வாறு அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்