அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சியின் பேரணி ஒன்று இடம்பெற்றது.
அந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் இராமநாதன் அர்ச்சுனா ஒருசில கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
எதிரான விசாரணை
அதனைத் தொடர்ந்து அர்ச்சுனாவின் கூற்று தொடர்பில் விசாரணை நடத்துமாறு, நேற்று கூட்டு எதிர்க்கட்சி (Joint Opposition) சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்த காவல்துறைமா அதிபர், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணையொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 10 மணி நேரம் முன்