அதிபர் தேர்தலில் குதிக்கத் தயாராகும் எம்.பி
அதிபர் தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர். எனவே மக்கள் கூட்டங்களை நடத்தி செலவுகளை ஏற்றால் நானும் அதிபர் தேர்தலுக்கு வர முடியும். நான் இன்னும் ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு ஸ்டார் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
டை கோடீஸ்வரர்கள் என்று சொல்லப்படும் யாரும் வரமாட்டார்கள். பொருளாதார நெருக்கடி என்று சொல்கின்றார்கள்.
மக்கள் வாக்களிக்க வேண்டும்
ஆனால் குடும்பத்துடன் நாட்டை விட்டு செல்கிறார்கள். அவர்கள் முதல் வகுப்பிலேயே எங்கும் செல்கின்றனர். நல்ல ஹோட்டல்களுக்குச் சென்றிருக்கிறனர். இவை நிறுத்தப்பட வேண்டும்.
ரணில் நல்லவரா கெட்டவரா
என்ன பொருளாதார நெருக்கடி வந்தாலும் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் நல்லது கெட்டது இரண்டும் உண்டு. எனினும் மக்கள் தரப்பில் இருந்து பார்த்தால் அவர்கள் பிரச்சனையில் உள்ளனர். மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |