ஆனைவிழுந்தான் சுடலை வீதிக்கு அடிக்கல்
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை ஆனைவிழுந்தான் சுடலை வீதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன் தலைமையில் இன்று பிற்பகல் 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கலல்லை நாட்டி வைத்தார்.
வீதிக்கு அடிக்கல்
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து ரூபாய் 48 மில்லியன் பெறுமதியான வீதிக்கு முதல் அடிக்கல்லினை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் நாட்டி வைக்க தொடர்ந்து பருத்திதுறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், பருத்திதுறை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருளிங்கநாதன், பருத்திதுறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன் உட்பட பலரும் நாட்டி வைத்தனர்.

இந் நிகழ்வில் பருத்திதுறை பிரதேச சபை உறுப்பினர்கள், கற்கோவளம் கிராம மக்கள், npp உறுப்பினர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |