மீட்கப்பட்ட தமிழ் மக்களின் நகைகள் : செல்வம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

Selvam Adaikalanathan Sri Lanka Gold
By Shalini Balachandran May 04, 2025 08:15 AM GMT
Report

 தமிழ் மக்களின் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரிய முறையில் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் வசமிருந்த தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகள் தற்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு மத்திய வங்கியினால் குறித்த நகைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு

யாழ்.ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு

மனிதாபிமான யுத்தம்

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மனிதாபிமான யுத்தம் என்ற போர்வையில் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் கலாச்சார அடையாளமாக பேணப்பட்டு வந்த சொத்துக்களை இல்லாமல் செய்து தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய பேரினவாத சிந்தனை கொண்ட அரசுகள் தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகளை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான கருத்துகளையும் வெளியிடாமல் இருந்திருக்கின்றது.

மீட்கப்பட்ட தமிழ் மக்களின் நகைகள் : செல்வம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை | Mp S Request Regarding Recovered Gold

இந்த நிலையில் நகைகளை வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள வங்கிகளில் அடகு வைத்த மக்கள் தமது நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் தமது முதலீடுகள் அனைத்தையும் இழந்திருப்பதனால் பெரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலைமையில் தற்போதைய அரசு தேர்தல் நலனுக்கானதாக இருந்தாலும் அந்த நகைகள் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர்ந்து அதனை வெளிப்படுத்தியமையை வரவேற்கின்றேன்.

தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமி : மற்றுமொரு வேட்பாளர் கைது

தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமி : மற்றுமொரு வேட்பாளர் கைது

தமது நகை

எனினும், குறித்த நகைகளை உரியவர்கள் இல்லை என்ற காரணங்களை காட்டி அரசுடைமையாக்காது நகைகளுக்கு உரித்தான தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீட்கப்பட்ட தமிழ் மக்களின் நகைகள் : செல்வம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை | Mp S Request Regarding Recovered Gold

இதேவேளை பொதுமக்களும் தங்களிடம் குறித்த நகைகளை அடகு வைத்த பற்றுச்சீட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை வெளிப்படுத்தி தமது நகைகளை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்வதற்கும் முன் வர வேண்டும்.

பற்றுச்சீட்டுக்கள் உள்ளவர்கள் அதன் பிரதிகளை என்னிடம் வழங்கும் பட்சத்தில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரியவர்கள் இந்த நகைகளை பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும்.

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

பற்றுச் சீட்டுக்கள்

அத்துடன் அரசாங்கமானது வங்கிகளில் அடகு வைத்த பற்றுச் சீட்டுக்கள் பல பொது மக்களிடம் இல்லாத நிலை தற்போது காணப்படுகின்றது.

மீட்கப்பட்ட தமிழ் மக்களின் நகைகள் : செல்வம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை | Mp S Request Regarding Recovered Gold

அது மாத்திரமன்றி அடகு வைத்த பலர் இன்று இயற்கை எய்தியும் உள்ளதால் அவை தொடர்பில் ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

எனவே, அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர நகைகளை அரசுடைமையாக்கி தமிழ் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

அரச, தனியார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

அரச, தனியார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020