மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறிதரன் எம்.பி.
Sri Lankan Tamils
Tamils
S. Sritharan
By Independent Writer
சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று செவ்வாய்கிழமை (25) காலை விஜயம் செய்தார்.
இதன்போது மாவீரர் துயிலுமில்லத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக ஆத்மா சாந்தி வேண்டி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அத்தோடு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
நிவர்த்தி செய்யப்பட வேண்டும்
இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் அதிகமான தேவைப்பாடுகள் காணப்படுகின்றன, இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

தமிழர்களின் தலைநகராக இருக்கின்ற திருகோணமலையில் காணப்படுகின்ற சம்பூர் ஆலங்குளம் துயிலுமல்லத்திற்கு உள்நாட்டிலும் கடல் கடந்த நாடுகளில் இருக்கின்ற தனவந்தர்கள் தங்களாலான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி