சஜித் ரணில் இணைவுக்கு மத்தியில் தள்ளாடும் உறுப்பினர்கள்!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஒன்றிணைவு எனும் போர்வையில் சில தலைவர்கள் எம்.பி.க்களை கவர்ந்திழுக்க முயற்சிப்பதால் குறித்த ஒன்றிணைவு முயற்சி தோல்வியடையும் அபாயத்தில் உள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டிணைவு ஒப்பந்தம் நேர்மையுடன் மேற்கொள்ளப்படவில்லை என இரு கட்சிகளின் பல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கூட்டணி
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றதுடன் இதன்போது உறுப்பினர்கள் குழு இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி குறித்து கட்சித் தலைமையிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியது.

குறித்த கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தனது தலைமையில் இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.
சில தலைவர்கள் தனியாகச் சென்று வெற்றி பெற முடியும் என நம்பிக்கை கொண்டிருப்பதால், இந்த மனநிலை கூட்டுப் பணி ஏற்பாட்டிற்கு பெரும் தடையாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இரு கட்சிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர், இரு கட்சிகளும் ஒன்றிணையாமல் இந்த அளவிலான வெற்றியை அடைய முடியாது என மீண்டும் ஒருமுறை கட்சித் தலைமைகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், சில தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மற்றவர்கள் உருவாகி தங்கள் தலைமைப் பதவிகளை இழந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |