பொருளாதார நீதிக்கான எம்.பி க்களின் மன்றம் - உத்தியோகபூர்வ அங்கீகாரம் கோரி சபாநாயகருக்கு கடிதம்
இலங்கையில் பொருளாதார நீதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தை நாடாளுமன்றத்தில் முறையான குழுவாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுதிய கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பதனால் கட்சி சார்புகளை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம்.
குழுவில் 45 பேர் வரை உள்ளனர்

எனவே, இந்த மன்றத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயசேகர அந்த கடிதத்தினை எழுதியுள்ளார்.
இந்தப் புதிய மன்றத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழு உட்பட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மன்றத்தில் அங்கம் வகித்துள்ளனர்.
சென்ற வாரம் கொழும்பில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வைத்து இந்த மன்றத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், இந்த குழுவில் சுமார் 45 பேர் வரை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.