எம்.பிக்களின் ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு : அநுர அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை
கே.டி. சித்ரசிறி குழுவின் பரிந்துரையின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான (எம்.பி.க்கள்) ஓய்வூதியத் திட்டத்தை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அரசு சமர்ப்பிக்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala)தெரிவித்தார்.
எம்.பி.க்கள் அனுபவிக்கும் சலுகைகளைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி குறித்து கருத்து தெரிவித்த விஜேபால,அந்த வாக்குறுதியின்படி ஏற்கனவே செயல்பட்டதாகக் கூறினார்.
வாகனம் இல்லை, உணவு விலை அதிகரிப்பு
"நாங்கள் அரசாங்கத்தை எவ்வாறு நடத்துகிறோம் என்பதை நீங்கள் ஆராய்ந்தால், இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனம் வழங்கப்படவில்லை என்பதையும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளை வழங்க வேண்டாம் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்பதையும் நீங்கள் கவனிப்பீர்கள்," என்று அவர் தெரிவித்தார்.
"மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவின் விலை ரூ. 450 லிருந்து ரூ. 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட 51 அதிகாரபூர்வ குடியிருப்புகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அவர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவுகளையும் நாங்கள் குறைத்துள்ளோம்."
அவர்கள் எங்களுடன் உடன்படுவார்கள்
எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற சிறப்புரிமைகளைக் குறைக்கும் பிரேரணைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage)மற்றும் ஓய்வூதியத்தை ஒழிக்கும் பிரேரணைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) ஆகியோர் முன்வைத்தமை தொடர்பாக, விஜேபால பதிலளித்தார்:
"அவர்கள் இந்த பிரேரணைகளை முன்வைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களு க்கான ஓய்வூதியங்களை ஒழிப்பதற்கான எங்கள் திட்டத்தை நாங்கள் இறுதியில் முன்வைக்கும்போது, அவர்கள் எங்களுடன் உடன்படுவார்கள் என்பதை இது காட்டுகிறது."என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)