ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முஜிபுர் ரஹ்மான் நேரடியாகப் பொறுப்பு…! புதுக்கதை விடும் சரத் வீரசேகர
2016-ஆம் ஆண்டில், நான்கு இலங்கைக் குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயிற்சிக்காக சிரியாவுக்குச் சென்றதாக அப்போதைய அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியதாக ரியத் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அந்தக் கூற்றை முஜிபுர் ரஹ்மான் அப்போது நிராகரித்தும், சிறுமைப்படுத்தியும், வெறுப்புப் பேச்சு என்று முத்திரை குத்தியும் அடக்கியதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முஜிபுர் ரஹ்மான் நேரடியாகப் பொறுப்பு
அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் கூற்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், முஜிபுர் ரஹ்மானும் அவரது குழுவினரும் அது தொடர்பான விசாரணையைத் தடுத்திருக்காவிட்டால் ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என்றும், எனவே ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முஜிபுர் ரஹ்மான் நேரடியாகப் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஹாரனின் தம்பியை யார் சென்று பார்த்தார் என்பதும், மாவனெல்லையில் புத்தர் சிலையைச் சேதப்படுத்திய இரு இளைஞர்களின் கைது நடவடிக்கையை யார் தடுத்தார் என்பதும்,
தவ்ஹீத் மசூதிகளைக் கட்ட யார் அனுமதி அளித்தார்
வனத்தமுல்லாவில் வெடிபொருட்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க யார் கட்டாயப்படுத்தினார் என்பதும், நல்லாட்சிஅரசாங்கத்தின் போது தவ்ஹீத் மசூதிகளைக் கட்ட யார் அனுமதி அளித்தார் என்பதும் முஜிபுர் ரஹுமனுக்குத் தெரியும் என்று சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |