வைத்தியசாலையிலுள்ள முஜிபுர் ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்!
தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் கொழும்பு சென்ட்ரல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விடயத்தினை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இருந்த காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் நேற்றுமுன்தினம் அண்டிஜன் பரிசோதனை செய்துகொண்டேன். அதன் முடிவு நெகடிவ் என்று இருந்தது.
மீண்டும் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே கடந்த நாட்களில் என்னோடு நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நான் விரைவில் பூரண சுகமடைவதற்கு உங்களுடைய பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுமாறும் மிகவும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.