பதவி விலகும் சஜித் தரப்பு எம்.பி - நாடாளுமன்ற ஆசனம் யாருக்கு தெரியுமா..!
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தகவல் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
கொழும்பு மாநகர முதல்வர் பதவி
தமது கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிட ரஹ்மானை முன்னிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவருடைய நாடாளுமன்ற ஆசனம் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த வரிசையில் இருக்கும் ஏ.எச்.எம்.பௌசி அல்லது ஹிருணிகா பிரேமச்சந்திரவால் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா வாழ்த்துகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.