தமிழரின் வாக்குக்காக பிரபாகரனின் பெயரை பயன்படுத்தவேண்டாம்! சபையில் அர்ச்சுனா ஆவேசம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் கதைக்க அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு எவ்வித நிலைப்பாடும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், “அமைச்சர் பிமல் ரத்நாக்க யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்த போது யாழில் மாபியா இருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
மாகாண சபை தேர்தல்
மாகாண சபை தேர்தல் நெருங்கி வருவதால் யாழ்ப்பாணம் சென்று பிரபாகரன் பற்றி இவர்கள் கதைக்கின்றனர்.
நீங்கள் பிரபாகரன் பற்றி கதைக்க வேண்டாம். நீங்கள் நாட்டுக்காக உங்களுக்காக போராடிய இராணுவ வீரர்கள் தொடர்பில் பேசுங்கள்.
எங்களுக்கு பிரபாகரன் தொடர்பில் உயர் நிலைப்பாடு உள்ளது. அதற்காக நாம் மீண்டும் பிரிவினைவாத போரை ஏற்படுத்த போவதில்லை.
நீங்கள் தேர்தல் காலங்களில் பொய் சொன்னீர்கள். நாங்கள் அதை நம்பி வாக்களித்தோம். இன்று மாகாண சபை தேர்தல் நெருங்குவதால் பிரபாரகனின் பெயரை குறிப்பிட்டு வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
அன்று உகண்டாவில் பணம் கொண்டு வருவதாக குறிப்பிட்டனர். இன்று கோட்டாலும் கொண்டு வருவதாகவே குறிப்பிடுகின்றனர். இனியும் நாங்கள் ஏமாற தயாராயில்லை” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
