டயானாவின் பதவிக்கு முஜிபுர் : வெளியானது வர்த்தமானி அறிவிப்பு
Parliament of Sri Lanka
Sri Lankan Peoples
Samagi Jana Balawegaya
Diana Gamage
By Dhilak
டயானா கமகே (Diana Gamage) நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman), ஐக்கிய மக்கள் சக்தியினால் பரிந்துரைக்கப்பட்டதாக உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் பதவி நீக்கப்பட்டது.
நியமனம்
இதன்படி, வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்