முல்லைத்தீவில் 400 இற்கும் அதிகமானவர்கள் தலைமறைவு - வலைவீசும் ஸ்ரீலங்கா இராணுவம்
research
mullai-corona-army
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களை தேடும் பணியில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் தனிமைப்படுத்தல் விதியை மக்கள் மீறி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள் கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தலைமறைவாகியுள்ளவர்களை தேடும் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்