முல்லைத்தீவில் வீடு புகுந்து வாள்வெட்டு -வாகனங்களுக்கும் தீவைப்பு -ஸ்தலத்திற்கு விரைந்துள்ள பொலிஸார்
police
investigation
mullaithivu
valveddu
By Sumithiran
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் இன்றிரவு வீடு புகுந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகனமொன்றுக்கு தீ வைத்துள்ளார்கள்.
இதன் போது வாகனம் ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன் ஒரு வாகனம் சேதமடைந்துள்ளது. அத்துடன் வீட்டில் இருந்த ஒருவர் வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி