முல்லைத்தீவில் 4 பேர் கடற்படையினரால் கைது!
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட புல்மோட்டைப் பகுதியினை சேர்ந்த நான்கு மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் நாயாறு பகுதி கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையான சுருக்குவலை,மற்றும் ஒளிபாச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு படகுகளையும் அதில் இருந்த நான்கு மீனவர்களையும் கைதுசெய்துள்ளார்கள்.
திருகோணமலை புல்மோட்டை பகுதியனை சேர்ந்த 29,23,28,20 வயதுடைய நான்கு மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகினையும் நாயாறு கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
மீனவர்கள் நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் படகுகள் நாயாறு கடற்படை முகாமில் உள்ளது .
இது தொடர்பான சட்டநடவடிக்கையினை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .