முல்லை - வலைஞர்மடத்தில் கைக்குண்டுகள் மீட்பு!
police
mullaitivu
bomb
By Vanan
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வலைஞர்மடம் பகுதியில் ஜெக்கட் ஒன்றும் கைக்குண்டுகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (23) வலைஞர்மடம் பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டுகள் இருப்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசார் குறித்த பகுதிக்குச் சென்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளார்கள்.
இதன்போது ஜெக்கட் ஒன்றும் ஆறு தமிழன் குண்டுகளும் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்