முல்லைத்தீவு கொரோனா மருத்துவமனைக்கு கட்டில்கள் வழங்கி வைப்பு!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அரச சார்பற்ற தனியார் நிறுவனம் ஒன்றினால் கட்டில்களும் அதற்கான மெத்தைகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவுகளை நடத்தி செல்வதற்கு வளப்பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்கிவருகின்றன.
அந்த வகையில் ஒரு நிறுவனத்தினால் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான 10 கட்டில்களும் அதற்கான மெத்தைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வைத்து நிறுவனத்தின் செயற்திட்ட முகாமையாளர் அ.ஸ்டெவின் அவர்களினால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் மற்றும் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவற்றை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையிடம் கையளித்துள்ளார்கள்.