முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைப்பு!
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Laksi
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவிற்கு இன்றையதினம் (21) வருகை தந்த விசேட ரி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அழைப்பு கடிதம்
அதேவேளை, தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை நாளையதினம் (22) விமான நிலையத்தில் அமைந்துள்ள ரி.ஐ.டி அலுவலகத்திற்கு சமூகம் தருமாறு அழைப்பு கடிதத்தினை குறித்த தரப்பினரிடம் வழங்கியுள்ளனர்.
குறித்த நபர்கள் குடிவரவு ,குடியகல்வு தொடர்பான குற்றம் ஒன்றில் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்