ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கண்ணிவெடி அச்சுறுத்தலைத் தடுக்க அமெரிக்கா தீவிரம்!
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியின் தற்போதைய நிலைவரம் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரந்த ஆதரவு
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை வைப்பதையும் கப்பல்களுக்கு வரி விதிப்பதையும் தடுப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் இது தொடர்பான ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் (Tommy Pigott) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், இந்த முயற்சிகளுக்கு ஐ.நா உறுப்பு நாடுகளின் பரந்த ஆதரவு இருப்பதை மார்கோ ரூபியோ இதன்போது வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |