முற்றாக முடங்கி காணப்படும் முல்லைத்தீவு மாவட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகின்ற ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தணி காரணமாக கடந்த 17ஆம் திகதி இரவு 11 மணி முதல் முல்லைத்தீவு முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் பிரிவுகள் முழுமையான முடக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்றய தினம் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் நேற்று முல்லைத்தீவு மாவட்டம் முற்றுமுழுதாக முடங்கி காணப்படுகிறது
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகளைதவிர ஏனைய 54 கிராம அலுவலர் பிரிவுகளையும் முடக்க நிலையில் இருந்து விடுவிப்பதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கோரியிருந்தது.
இதற்கு அமைவாக நேற்றுமுன்தினம் காலை 6.30 முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர ஏனைய பிரிவுகள் முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.