முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட விவகாரம்!! இராணுவத் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

attack army mullaitivu journalist
8 மாதங்கள் முன்

அண்மையில் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம், ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறியுள்ளது.

இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “முல்லைத்தீவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து இலங்கை இராணுவம் மற்றும் அதன் இராணுவ காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய மேற்படி சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அதாவது 2021 நவம்பர் 27ஆம் திகதி அந்த இடத்தில் கடமையாற்றிய 682 படைப்பிரிவு படையினரிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் நாட்டின் சில அச்சு ஊடகங்கள் என்பன இந்த சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத, உறுதிப்படுத்தப்படாத மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டன.

உண்மையில், படை வீரர் ஒருவர், முள்ளிவாய்க்கால் பெயர் பலகையுடன் இணைந்ததாக இராணுவத்தினரை ஏன் படம் பிடிக்கிறீர்கள் என ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு கேள்வி எழுப்பியவாறு அந்த இராணுவ வீரர் குறிப்பிட்ட ஊடகவியலாளரை நோக்கிச் செல்ல முற்பட்டதும், அவர் அந்த படைவீரர்களுடன் கதைத்தவாறு பின்னோக்கிச் சென்றுள்ளார், இவ்வாறு பின்னோக்கிச் சென்றவேளை, திடீரென்று பெயர் பலகையில் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தனது சொந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார். சேற்று நிலப்பகுதியில் விழுந்த அவரது கைகள் 'காயமடைந்து' இருப்பதை அவதானித்தார்.

இவர் இவ்வாறு விபத்துக்குள்ளாகி காயமடைந்த சில நொடிகளில், அவரது கையடக்க தொலைபேசியின் ஊடாக தகவல் கொடுக்கப்பட, செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்த பல குழுக்கள் வீடியோ கமராக்கள் மற்றும் தொலைபேசிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த நபரை பாசாங்குத்தனமாக அந்த இடத்தில் படுக்கச் செய்துள்ளனர்.

இது படைதரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்ட சதி என வெளிச்சத்திற்கு வந்தது.

வீதியோரத்திலுள்ள பெயர் பலகையை படமெடுக்கும் போது அந்த இடத்தில் இருந்த இராணுவ வீரர்களால் அவர் 'மிருகத்தனமாக' தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் என்று கூறும் அளவுக்கு படப்பிடிப்பிற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன.

மேலும் அவர்கள் உடனடியாக முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு அறிவித்து, அந்த நபரை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம் (27) காலை அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு சீறல் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதன்மைச் சாட்சியத்தின் பேரில், அந்த இடத்தில் பணியில் இருந்த மூன்று இராணுவ வீரர்களையும் காவல்துறையினர் கைது செய்து, மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை பிணையில் விடுவித்தனர்.

இதற்கிடையில், மேற்படி ஊடகவியலாளர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர், ஞாயிற்றுக்கிழமை (28) வெளியிடப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவ - சட்டப் பரிசோதனை அறிக்கை, இந்த ஊடகவியலாளர் 'சிராய்ப்பு' மற்றும் 'சிறு காயம்' என்பவற்றுக்கு மட்டுமே சிகிச்சை பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வறிக்கை 'முட்கம்பியால் சுற்றப்பட்ட பனைக் குச்சியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்' என சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூற்றுக்கு இது முற்றிலும் மாற்றமாக அமைந்திருந்தது.

சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்ட 'பத்திரிகையாளர்கள்' இதுபோன்ற நடவடிக்கைகளினால் 'பத்திரிகையாளர்கள்' என்றழைக்கப்படுபவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க தயாராக உள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாதுகாப்புப் படையினர், கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஆரோக்கியமான நல்லிணக்கம் மற்றும் நல்ல நல்லெண்ண உணர்வுகளின் சைகைகளின் காரணமாக, சந்தர்ப்பவாத மற்றும் இனவாத எண்ணம் கொண்ட சக்திகளால் ஏமாற்றப்படாமல் ஒரு நேர்மறையான முறையில் ஈர்க்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளனர்.

வடக்கிலும் சரி, வேறு இடங்களிலும் சரி, தாம் சேவை செய்யும் அனைத்து இலங்கையர்களின் நலன்களுக்கான உண்மையான மற்றும் முழுமையான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், பகுத்தறிவு மற்றும் அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும், இதுபோன்ற திரிபுபடுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நிகழ்வுகளை நம்பி ஏமாற வேண்டாம் என இராணுவம் கேட்டுக்கொள்கிறது.

அதற்கு பதிலாக, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திப் பாதையின் புதிய சகாப்தத்தை உருவாக்க ஒன்றாக கைகோர்க்குமாரு இராணுவம் வேண்டுகோள் விடுக்கின்றது” என்றுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

01 Sep, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, சென்னை, India, மடிப்பாக்கம், India

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ் மூளாய் தெற்கு, Jaffna, London, United Kingdom

16 Aug, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Mississauga, Canada

12 Aug, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Toronto, Canada

14 Aug, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் மேற்கு, கோண்டாவில், Scarbrough, Canada

16 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Montreal, Canada

12 Aug, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கோண்டாவில், சாவகச்சேரி, சிட்னி, Australia

17 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பன்னாலை, Bishop's Stortford, United Kingdom

15 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

18 Aug, 2022
மரண அறிவித்தல்

சுதுமலை, மெல்போன், Australia, மல்லாகம்

06 Aug, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, உடுப்பிட்டி

30 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மெல்போன், Australia

18 Aug, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, மட்டக்களப்பு, கைதடி வடக்கு

17 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, Stanmore, United Kingdom

29 Aug, 2021
மரண அறிவித்தல்

நீராவியடி, யாழ்ப்பாணம், Orly, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு

18 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், டோட்மண்ட், Germany

18 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நீர்வேலி, London, United Kingdom

13 Aug, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

17 Aug, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sens, France

29 Aug, 2021
மரண அறிவித்தல்

முள்ளானை இளவாலை, Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

சுன்னாகம், Kirchheim Unter Teck, Germany, Toronto, Canada

13 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ் அராலி கிழக்கு, Jaffna, சம்பியா, Zambia, Toronto, Canada

14 Aug, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அச்சுவேலி, சூரிச், Switzerland

16 Aug, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, London, United Kingdom

16 Aug, 2021
மரண அறிவித்தல்