நீதிபதிக்கே இந்த நிலையென்றால்...! சாமான்ய ஈழத்தமிழனின் ஆதங்கம்
குருந்தூர் மலையில் தீவிரப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நகர்வுகளுக்கு எதிரான வழக்குகளை கையாண்டு வந்த நீதிபதி தனக்குரிய உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதித்துறை பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்துவிட்டு இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.
தனது பதவி விலகலுக்கான காரணங்களாக நீதிபதி ரி.சரவணராஜா குறிப்பிட்ட விடயங்கள் சிறிலங்காவின் அரசியல் மயப்படுத்தப்பட்ட நீதித்துறையை அம்பலமாக்கியுள்ளது.
குறிப்பாக குருந்தூர்மலை பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கில் ஏற்கனவே தான் வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக நாட்டின் சட்டமா அதிபரால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட விடயத்தை அவர் பகிரங்கப்படுத்தி நாட்டின் நீதித்துறையின் சீத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
எமக்கு எதை தரப்போகிறார்கள்
இந்த விடயம் தொடர்பில் பலரும் எதிர்வினைகைளை வெளிப்படுத்தி வரும் நிலையில், “நிலம் தின்னும் பேய்களும் மனித மாமிசம் புசிக்கும் புலையர்களுமாய் தங்களை மாற்றிக்கொள்ளத்துடிக்கும் புத்தரின் பேரர்களிடம் நாம் எதை தேடிக்கொண்டிருக்கிறோம், அவர்கள் எமக்கு எதை தரப்போகிறார்கள்?
ஒரு நீதிபதிக்கு தராத கௌரவத்தையா எமக்கு தரப்போகிறார்கள்? நீதிபதிக்கு வழங்கப்படாத நீதியையா எமக்கு தரப்போகிறார்கள்?” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஈழத் தமிழர் ஒருவர்.
“எப்படி சொல்லி எப்படி முடிப்பது நீதிதேவதையின் கால்களையும் கைகளையும் ஒடித்து சரத்வீரசேகர போன்றவர்கள் தங்கள் வீட்டுக் கொல்லைகளில் அடுப்பில் வைத்தாற்போன்றுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது.
பெயருக்கு ஜனநாயக சோசலிசக் குடியரசு - அந்தப் பெயரைத்தவிர இங்கு எதிலும் ஜனநாயகத்தை தேடிக்கண்டுபிடித்து விடவே முடியாது.
உலகநாடுகளிடம் கடன்களை வாங்கி தமிழர் நிலங்களைப் பிடித்து விகாரைகளைக் கட்டி பெருமைகொள்ளுகின்ற பௌத்த அரசினதும் அதன் சிங்கள மக்களினதும் மகாவம்ச மனோநிலை மாறாத போது நீங்கள் எதைக்கோரி போராடப்போகிறீர்கள்.
2000 நாட்களை கடந்து இன்றுவரை வீதியில் நின்று போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே உங்களுக்கு இந்த நாட்டில் என்ன நீதியைத் தரப்போகிறார்கள்.
அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக சிங்கள இனவெறி அரசினாலும் அதன் ஏவல்நாய்களான தமிழ் முஸ்லிம் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலையுண்டுகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களே உங்களுக்கு என்ன நீதி கிடைக்கப்போகிறது இந்த நாட்டின் நீதித்துறையால்,
சிறிலங்காவிடமும் அதன் அரச கட்டமைப்புக்களிடமும் நீதி கிடைக்குமென காத்திருப்போரே உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது.
பேய் அரசாண்டால் சாத்திரங்கள் பிணம் தின்னுமே ஒழிய வேறேதுவும் சாத்தியமில்லை.
உள்நாட்டு விசாரணை போதுமென நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டிருந்த தமிழ் அரசியல் வாதிகளே இப்போது எதை பொத்திக்கொள்ளப்போகிறீர்கள்.
இந்த நாட்டில் அதன் ஆட்சியில் என்ன கிடைக்கப்போகிறது என்று அதன் நாடாளுமன்றத்தில் பாய்போட்டு படுத்திருக்கிறீர்கள்?
உங்கள் வயிறுகள் நிறையும். பரம்பரைக்கு சொத்து சேரும். இதைவிட இனத்திற்கு வேறென்ன கிடைக்கப்போகிறது.
இது இருண்ட தேசம்
இனத்திற்காக அரசியல் செய்தால் இன்றே பதவிகளை துறந்துவிட்டு வாருங்கள். இல்லையேல் நக்கிப்பிழைப்பது தான் வேலையென்றால் தமிழ்த்தேசியம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நீதிபதிக்கு நீதியில்லாத தேசம், காடையர்களை நாடாளுமன்றத்தில் பாதுகாக்கும் தேசம், கொலைக்களங்களை நிகழ்த்திய தேசம்
இன்று நீதிபதியை அச்சுறுத்தி தீர்ப்பை மாற்றச்செய்ய தீவிரமாய் ஓடிவிளையாடிய அரசும் அதன் காலைப் பிடித்துக்கொண்டு தவமிருக்கும் அதன் சட்டவாக்க உயர் அதிகாரியான தமிழருக்கும் ஏதும் கலப்பிருக்கலாமே ஒழிய வேறேதுவும் இருந்துவிடப்போவதில்லை.
இது இருண்ட தேசம். உண்மையில் ஆசியாவின் அல்ல அகிலத்தின் ஆச்சரியம் தான் இந்த நாடு” - என புலம்புகிறார் அந்த ஈழத்தமிழர்.
YOU MAY LIKE THIS VIDEO
