எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் : சமூக செயற்பாட்டாளர் சிவமணி கேள்வி

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Beulah Sep 06, 2023 11:07 AM GMT
Report

புதைகுழி எலும்பு கூடு என தெரிந்தும் அகழ்வு பணியை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் ? என சமூக செயற்பாட்டாளர் சுந்தரம்பிள்ளை சிவமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியை இன்னும் 11 நாட்களில் மேற்கொள்ள தீர்மானம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியை இன்னும் 11 நாட்களில் மேற்கொள்ள தீர்மானம்

“கொக்கு தொடுவாய் பகுதியிலே பிறந்து தற்போது வரை வசித்து வருகின்றேன். நாம் இடம் பெயர்ந்தாதோ அல்லது புதைகுழியில் புதைக்கப்பட்டதோ முக்கியமான விடயம் அல்ல, புதைகுழியில் புதைக்கப்பட்ட எமது காணாமல் போன பிள்ளைகள் தான் எமக்கு முக்கியம்.

புதைகுழியில் காணப்பட்ட பிள்ளைகள் அனைத்தும் கை கால்கள் சப்பாத்து நூல்களாலும், இடுப்புப்பட்டியினாலும் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததனை அகழ்வுப்பணியிலே காணமுடிந்தது.

பிள்ளைகளை கை, கால் கட்டி புதைக்க வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு இல்லை. ஆனால் இங்கு புதைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் அறைகூவி அழைக்கப்பட்ட பிள்ளைகள்.

அதாவது, ஒரு நாளாவது நீங்கள் காவலரண்களில் நின்றால் அல்லது விடுதலை புலிகளுக்கு ஒரு நேர உணவு அளித்திருந்தால் கூட வாருங்கள் உங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவோம் என அழைக்கப்பட்டவர்கள் தான் இவர்கள், இதில் இளைஞர்களும் இளம் மங்கையர்களும் தான் அதிகம்.

குறிப்பாக இன்னும் கொஞ்ச பிள்ளைகள் வெள்ளை கொடி பிடித்து சரணடைந்தவர்கள், இராணுவத்தினர் தமிழ் மக்களை வைத்து பொதுமன்னிப்பு வழங்கப்படும் என கூறி அழைத்ததனை நாம் எம் கண்ணாலே கண்டிருக்கின்றோம்.

எங்கே எம் பிள்ளைகள்

13 வருடமாக கையளித்த எம் பிள்ளைகள் எங்கே என கேட்கின்றோம், பதில் இல்லை. காரணம் என்ன? ஊர் ஊராக சந்தி சந்தியாக இராணுவத்திடம் பிள்ளைகளை கையளித்த பெற்றோர் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் : சமூக செயற்பாட்டாளர் சிவமணி கேள்வி | Mullaitivu Kokkuthoduvai Excavation Sl Sivamani

பதில் இன்றுவரை இல்லை. எங்கே எம் பிள்ளைகள்? எம் கால் மண்ணிலேயே எம் பிள்ளைகளை புதைத்திருக்கிறார்கள் சிங்கள மக்களை குடியேற்ற நீங்களே தண்ணீர் வசதி செய்து நீங்களே எம் பிள்ளைகள் புதைத்த இடத்தை காட்டி கொடுத்து விட்டீர்கள்.

நீங்கள் எம் பிள்ளைகளை வஞ்சித்து எவ்வளவு வன் கொடுமைகள் செய்தீர்களோ அவ்வளவும் வெளிவரும்.

புதைகுழி எலும்பு கூடு என தெரிந்தும் அகழ்வு பணியை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் எலும்புகூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் ? எல்லாவற்றையும் வெளியிலெடுத்து எம் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரின் கேள்விக்கு விடை தாருங்கள்.

மன்னார் சம்பவம்

மன்னாரில் ஒரு வருடம் இரண்டு வருடம் என கடத்தி செல்வது போல இங்கு கடத்த வேண்டாம் எமக்கு மூன்று மாதத்திற்குள் உடனே பதில்வேண்டும்.

எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் : சமூக செயற்பாட்டாளர் சிவமணி கேள்வி | Mullaitivu Kokkuthoduvai Excavation Sl Sivamani

மூன்று மாதத்திற்குள் அகழ்வு பணியினை முடித்து எமக்கு பதில் வழங்க வேண்டும். எமது கிராமத்திற்குள் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றது.

நாம் இருக்கும் இடத்தில் பிள்ளைகளை புதைத்துவிட்டு அதற்குமேல் நாம் இருந்தால் என்ன நடக்கும் இது நாட்டுக்கு சாபக்கேடு, உடனடியாக இச்சடலங்கள் அகற்றப்பட்டு எமது கிராமத்திற்கு சாந்தி செய்ய வேண்டும்.

மன்னார் புதைகுழி வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

மன்னார் புதைகுழி வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

புதைக்கப்பட்ட இடம் பெரிய இராணுவ முகாம் மண்மேடுகளால் உயர்த்தப்பட்ட இடம் அந்த இடத்திற்கு யாரையும் வரவிடாதபடி பின்வீதியாலே பயணம் செய்து வந்தது.

யார் எங்கட பிள்ளையள கொண்டுவந்து புதைத்தது

அப்படியான இடத்தில் யார் எங்கட பிள்ளையள கொண்டுவந்து புதைத்தது இராணுவம் தான்.

எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் : சமூக செயற்பாட்டாளர் சிவமணி கேள்வி | Mullaitivu Kokkuthoduvai Excavation Sl Sivamani

இதில் சர்வதேசம் தான் தலையிட்டு காணாமல் போன எம் பிள்ளைகளுக்கு நீதியினை பெற்றுதர வேண்டும்.

குறித்த இடத்திற்கு நாம் செல்லகூடாது என்று கூறுகின்றார்கள் சம்பந்தப்பட்டவர்கள் தான் போக வேண்டும் என கூறுகின்றார்கள்.

யாரோ முகம் தெரியாத இதை பற்றி அறியாதவன் எல்லாம் வாறான் ஆனால் எங்கட பிள்ளையள தானே அங்கே புதைத்திருக்கிறார்கள் அதற்கு நாம் ஏன்போகக்கூடாது.

யார் எமக்கு அந்த உரிமை இல்லை என கூறியது. எம் பிள்ளைகளை இங்கே புதைத்தவர்கள் தான் இதையும் கூறுகிறார்கள்.

இந்நிலமை இனியும் தொடரக்கூடாது. இதை நான் சர்வதேசத்திற்கும், சர்வதேச நாடுகளில் வசிக்கும் எம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும், தமிழினத்திற்கும் கூறுகின்றேன்” என வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி