மகாவலி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்திய மக்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
மகாவலி அதிகார சபையினால் உள்வாங்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இன்று காலை 11.30 மணியளவில் கொக்குத்தொடுவாய் பகுதியில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் கலந்து கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த பகுதியில் இடம் பெறுகின்ற மகாவலி ஆக்கிரமிப்பு மற்றும் தங்களுடைய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தினர்.
குறிப்பாக தங்கள் பிரதேசத்திற்குரிய பிரதான வீதி மற்றும் வயல் நிலங்களுக்கு செல்கின்ற வீதிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது மக்கள் தெளிவுபடுத்தினர்.

