புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம்- பிரதான சூத்திரதாரி தொடர்பில் வெளியான தகவல்!

arrest police puthukkudiyiruppu robbery mullaitivu
By Kalaimathy May 01, 2021 10:54 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் இருந்தும் வங்கிகளில் வைப்புக்களில் இருப்பதுமாக சுமார் 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இவர்களால் சுமார் 150 பவுன் வரையான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  குறித்த குற்றச்செயல்களில் பிரதான சூத்திரதாரி வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்த பிரதான சூத்திரதாரி, சுழிபுரம் பகுதியை சேர்ந்த இவருடைய மனைவி இவருடைய மருமகன் மற்றும் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் இவருடைய அக்கா  அவருடைய மகன் ஆகியோரே இந்த கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இவர்களில் 3 ஆண்களும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் அவர்கள் கொள்ளையிடும் நகைகளை குறித்த இரு பெண்களும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துவந்துள்ளதோடு கிளிநொச்சி மக்கள் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடைவு வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற 8 கொள்ளை சம்பவங்களும் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோம்பாவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் சி.சி.ரிவி காணொளி உதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பாகிகாரி அமரசிங்கவின் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களால் புதுக்குடியிருப்பில் 8 கொள்ளை சம்பவங்களும் கிளிநொச்சியில் 3 கொள்ளை சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் 2 கொள்ளை சம்பவங்களும் முல்லைத்தீவில் 2 கொள்ளை சம்பவங்களும் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிசார் நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026