முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு : பிரதமர் செயலகத்திற்கு பறந்தது முறைப்பாடு
முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலய அதிபரின் ஓய்வூதியத்திற்கு எதிராக பிரதமர் செயலகம் உட்பட பல்வேறு அரச நிறுவனங்களிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிபரின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலை சேவைக்காலத்தில் தாய் தந்தையை இழந்த மாணவனுக்கு யோகா அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட நிதி மோசடி, பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பில் இடப்பட்டதென காட்டப்பட்ட தொகை வைப்பிலிடப்படாமை.
பல்வேறு மோசடிகள்
அதிக காசோலைகள் பாடசாலை சிற்றூழியர் மற்றும் ஆசிரியர்களின் பெயரில் எழுதி மாற்றப்பட்டமை, எந்த ஒரு காசு பெறுவனவுக்கும் பற்றுச்சீட்டு வழங்கப்படாமை போன்ற மோசடிகளை முன்னிறுத்தியும் மற்றும் தற்போதைய விசுவமடு ம.வி பாடசாலை சேவை காலத்தில் பாடசாலையுடன் சம்மந்தம் இல்லாத விசுவநாதர் நிதியத்தின் ஊடாக பாடசாலைக்கு நிதி சேகரித்தமை, திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் காணொளி வாயிலாக நிதி சேகரித்தமை.

அரச நிறுவனங்களுக்கு பறந்த முறைப்பாடு
போன்ற முறைகேடுகளை முன்னிறுத்தி இவரின் ஓய்வூதியம் நிறுத்தப்படவேண்டும் என பிரதமர் செயலகம், இலஞ்ச ஊழல் ஆணைக் குழு, வடமாகாண ஆளுநர் செயலகம், ஓய்வூதிய திணைக்களம்,வடமாகாண பிரதம செயலாளர் செயலகம், தேசிய கணக்காய்வு நிறுவனம், முல்லத்தீவு அரச அதிபர் செயலகம், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனை போன்றவற்றிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |