உயிர் நீத்த உறவுகளுக்கு மாவீரர் நாளில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வழிபாடு!
temple
mullaitivu
ravikaran
northern province
nandikadal
By Kalaimathy
உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில், ஆத்மசாந்தி வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மாவீரர் நாளான இன்று காலை, நந்திக்கடல் பகுதியில், உயிரிழந்த உறவுகள் அனைவருக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மேலும் இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்