விபத்தில் சிக்கிய நிலையில் யாழ். போதனாவில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்தில் சிக்கிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பனிச்சங்குளம் - மாங்குளம் பகுதியை சேர்ந்த விஸ்வலிங்கம் கண்ணன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் கடந்த நான்காம் திகதி மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மரண விசாரணை
அவருக்கு முன்னால் ஒரு லொறி பயணித்துக்கொண்டிருந்துள்ளது.
அந்த லொறியானது வேகத்தை குறைத்ததும் அவர் அந்த லொறியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதையடுத்து, மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆறாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |