முள்ளியவளை தாக்குதல்தாரிகள் கைது செய்யப்படாதது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி!
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் 20.05.21 அன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரதேசங்கள் முற்றுமுழுதாக முடக்கப்படட பகுதியாக இருந்த நிலையில் முடக்கப்பட்ட இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் கிராம மக்களை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது
முள்ளியவளை பொலிஸ் பிரிவு முடக்கப்பட்ட நிலையில் இவர்கள் முறிப்பு பகுதியில் இருந்து சுமார் எட்டு கிலோமீற்றர் தூரம் வந்து எவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள் என பாதிக்கப்படடவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தாக்குதலில் காயமடைந்த நபர்
மூவர் வந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் எதற்க்காக தாக்கினார்கள் என்று தெரியவில்லை எனவும் தன்மீதும் இரண்டு பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தனக்கு தலையில் 24 தையல் போடப்பட்டுள்ளதாகவும் கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தான் வடை வியாபாரம் செய்தே தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் இவர்களது இந்த செயற்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
அத்தோடு குறித்தகுழு பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையது எனவும் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்கியது வனவள திணைக்களத்தின் அதிகாரிகள் மீது தாக்கியது என பலதரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இவர்களை இரண்டு நாட்கள் ஆகியும் சி சி ரி வி காணொளி ஆதாரங்கள் கொடுத்தும் இதுவரை பொலிசார் கைது செய்யவில்லை எமக்கு பொலிசார் மீது நம்பிக்கை இல்லை ஊடகங்களுக்கு தகவல் குடுக்க வேண்டாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்